லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'தி வாரியர்' படத்தின் முதல் பாடலை நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார்.
பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தி வாரியர்'. இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். சீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் உதயநிதி பாடலை வெளியிட்டார். 'புல்லட்' என தொடங்கும் அந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.
இந்த பாடல் வெளியீடு குறித்து நடிகர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இயக்குநர் லிங்குசாமி சார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழ்-தெலுங்கில் தயாராகும் 'தி வாரியர்' திரைப்படத்தின் லிரிக்கல் வீடியோவை இன்று வெளியிட்டோம். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் ராம் பொத்தினேனி அவர்களுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
கடந்த சில மாதங்களாக நடிகர் ரித்திக் ரோஷன் பற்றிய செய்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
தமிழில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘நான் ஈ’, விஜய
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.
