More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்!
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்!
Apr 19
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.



பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு இன்று தமிழக கவர்னர் ஆர். என்.ரவி வந்தார். அப்போது அவரை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிசா, தென்மன்டல கட்டளை தம்பிரான் திருஞானசம்பந்த மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.



கோவில் நிர்வாகம் மற்றும் கணேச குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். பின்னர் கவர்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கஜ பூஜையும், கோபூஜையும் நடைபெற்றது.



இதையடுத்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காளசம்ஹாரமூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். அதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூஜைகளும் நடைப்பெற்றது.



இதையடுத்து கவர்னர் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். அங்கு 27-வது குருமகா சன்னிதான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றார். சிறிது நேரம் அவர்கள் பேசி கொண்டிருந்தனர்.



முன்னதாக திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்து விட்டு ஆதீன மடத்துக்கு கவர்னர் என்.ஆர்.ரவி காரில் சென்றபோது செல்லும் வழியில் கம்யூனிஸ்ட், மீத்தேன் எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்பை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டது உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

 



இதையடுத்து போலீசார் பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep17

உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைà

Oct25

ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாசà®

May03

உத்தரப்பிரதேசத்தில்  மனைவியை நண்பனுக்கு பாலியல் விà®

Jul24

சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டà¯

Mar16

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்டà®

Jun01

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் மà

Jun12

தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கடà®

Jun23

ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்

Aug24

ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப

Jul08

மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்கà

Jul05

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்

Jul18

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளà®

Sep19

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிà

Jul25

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதம

Mar24

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (07:09 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (07:09 am )
Testing centres