நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பல வருடங்களாக கொடி கட்டி பறக்கிறார். அவரது இடத்தை வேறு எந்த நடிகையாலும் இதுவரை நெருங்க முடியவில்லை. நயன்தாரா தனித்தும், பிற கதாநாயகர்களுடன் இணைந்தும் நடித்துள்ள படங்கள் வசூலிலும் சக்கை போடு போடுகின்றன. இதனால், நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்கு படம் உயர்ந்து வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிகபட்சம் ரூ.3 கோடி என்று இருந்தது. பின்னர் அது ரூ.5 கோடியாக உயர்ந்தது.
இந்நிலையில், தற்போது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்திவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்குத்தான் அவர் ரூ.10 கோடி கேட்டதாக கூறப்படுகிறது.
படத்தில் நடிக்க நயன்தாரா 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கே இவ்வளவு சம்பளம் என்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனாலும், படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே, தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியும், நயன்தாராவும் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம்
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிம
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானத
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர
நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாத
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
தமிழ் சினிமாவி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க
நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த
பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு