தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்வராகவன்- தனுஷ் கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. தற்போது மீண்டும் இருவரும் 'நானே வருவேன்' படத்திற்காக இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். யோகிபாபு, இந்துஜா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நடிகை எல்லிஅவர்ராம் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. செல்வராகவன் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனுஷ் இதைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் படத்திலிருந்து பல சுவாரசியமான அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா
பாலாஜியின் உண்மை முகமும், மாற்றிக்கொள்ளும் குணமும் என
கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளி
நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்
நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம
நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்க
நேற்று வெளியான அஜித்தின் வலிமை படத்தை ரசிகர்கள் கொண்ட
நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந
தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண
நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்
