சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா அமெரிக்கா இடையிலான விரிவான மற்றும் உலகளாவிய கூட்டமைப்பின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லியாட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஆகியோருடன் இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளிவிவகார மந்திரி எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் ஏப்ரல் 11 ஆம் தேதி வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுதந்திரமான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இரு நாட்டு உறவுகள், தொழில்நுட்பம், கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை இந்த பேச்சுவார்த்தை மேலும் மேம்படுத்தும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தை கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் வாஷிங்டன் செல்ல உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்லும் இருவரும், அங்கு நடைபெறும் இந்தியா-ஜப்பான் இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையிலும் பங்கேற்கின்றனர்.
வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. ச
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சா
ஜப்பான் நாட்டில் நேற்று 7.3 ரிக்டர் அளவுகோலில் பயங்கர ந
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா நோய்த்தொற
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
ஆப்கானிஸ்தான் நாட்டில் நீண்டகால போர் முடிவுக்கு வராத
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்
