நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேபாள பிரதமர் சேர் பகதூர் தியூபா சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவுகள், வளர்ச்சி, வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு பற்றி இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, ரெயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பின்னர், இரு நாடுகளுக்கிடையிலான இணைப்பை அதிகரிப்பதற்கான, வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, பீகாரின் ஜெய்நகரை நேபாளத்தின் குர்தா பகுதியுடன் இணைக்கும் முதல் அகல ரெயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோர் காணொளி வாயிலாக திறந்து வைத்து, அந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர்.
ஜெய்நகர்-குர்தா வழித்தடமானது 35 கிமீ நீளம் கொண்டது. இதில் 3 கிமீ பீகாரிலும் மற்ற பகுதி நேபாளத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக் அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 65,000 மெட்ரிக் தொன் பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவ இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ