ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம்வத்ஸர் விழா நடைபெற்றது. இதையொட்டி கரௌலி நகரில் மத ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது மோட்டார் சைக்கிள் பேரணியின் மீது அடையாளம் தெரியாத சிலர் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் கலவரம் வெடித்தது. பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க உடனடியாக அங்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார். கரௌலி நகரம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டது.
இந்நிலையில் கரௌலியில் வெடித்த வன்முறை குறித்து ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, மாநில டிஜிபி எம்.எல். லாதருடன் ஆலோசனை நடத்தினார்.
அமைதியை நிலைநாட்டுமாறு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையே சமூக விரோதிகளை அடையாளம் காண காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அமைதி காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் à®
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் தங்கள் நà®
கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தமà®
முஹம்மது நபியைப் ப
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துà
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருà®
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட
தேனி மாவட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான் இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண௠தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானà மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
