உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் இருந்து ரஷிய படைகள் வெளியேறியதையடுத்து அங்கு உக்ரைன் வீரர்கள் மற்றும் மக்கள் சென்றனர். அப்போது தெருக்களில் பலரது உடல்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
புச்சாவில் ஒரு தெருவில் 20 ஆண்களின் உடல்கள் கிடந்தன. அவர்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று புச்சா மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார். மேலும் அவர் அதிர்ச்சி தகவல் ஒன்றையும் தெரிவித்தார்.
புச்சா பகுதியில் 300 பேர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டு உள்ளனர். நகர தெருக்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. சாலைகளில் உடல்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் ஒரே இடத்தில் பெரிய பள்ளம் தோண்டி உடல்களை புதைத்தோம் என்றார். இவர்கள் ரஷிய படையால் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இர்பின் பகுதியில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறி
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இ
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரரு
ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலீபான் பயங்கரவாதிகள் அர
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம
வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க
உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
ஜனவரி 18 , 2021
இத்தாலியில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிரிக்க தொடங்க
