ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் அடுத்த சில வாரங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தவிர அமைச்சரவையில் ராஜபக்சவினர் எவரும் அங்கம் வகிக்கவில்லை. அவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தில் சமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ஆகியோர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர்.
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்
எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
தொலைபேசி நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் தொலைபேசி கட
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மிகவும் கொடூர
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர்
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3
நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப