இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு எதிர்வரும் 9 ஆம் திகதி உலக நாடுகளுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்க தயாராகி ஐக்கிய நாடுகள் சபை வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வழங்கிய விசேட உரையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
6 பில்லியன் அமெரிக்க டொலர்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "அடுத்த 6 மாதங்களுக்கு நாட்டை நிலைநிறுத்துவதற்கு சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்த கடினமான நேரத்தில் நமது நாட்டிற்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.
எதிர்வரும் 9ஆம் திகதி உலகம் முழுவதும் பகிரங்க வேண்டுகோள் விடுக்க ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ளது", எனக் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல
இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் த
வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த
தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களின் வாண்மைத்துவ விருத
எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன
யாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
உலகப் பொருளாதாரத்தில் எமது வர்த்தக பங்கை அதிகரிக்க உத
புரெவிப் புயலினால் சேதமடைந்த கடற்றொழில் உபகரணங்களுக
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த