கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேரை அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரியா பெற்றுக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் பணிப்பாளரும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுமான லீ சூ சுல் அவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது உறுதியளிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் 200 இலங்கைப் பணியாளர்கள் கொரியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் வாரத்திற்கு இரண்டு விமானங்களாக அதிகரிக்கப்படும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், கொரிய தொழில் வாய்ப்புகளில் அதிகமானவற்றை இலங்கைக்கு வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்த கோரிக்கையும் கொரிய மனிதவளத் திணைக்களத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது.
நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ
வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2222 கொரோனா
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்த
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய ம
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ
யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க
இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்ப
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பத