அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்களுடன் நீரில் குதித்த இந்திய வாலிபர் அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் இந்தியா- தெலுங்கானாவின் ராஜண்ணா-சர்கில்லா மாவட்டத்தின் வெமுலவாடா பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் குமார் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஐதராபாத்தில் பி.டெக் படித்த பின்பு, கடந்த டிசம்பரில் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பதற்காக அமெரிக்காவின் மேற்கு புளோரிடாவுக்கு சென்றுள்ளார்.
கடந்த ஞாயிற்று கிழமை பொழுதுபோக்க தனது நண்பர்களான சுபஉதய், மைசூரா, சரண், ஸ்ரீகர் மற்றும் சார்வரி ஆகியோருடன் வாடகைக்கு படகு ஒன்றை எடுத்து கொண்டு மேற்கு புளோரிடாவின் கிராப் தீவுக்கு சென்றுள்ளார்.

இதன்போது வழியில் படகு திடீரென நின்று விட்டது. இதனால், நண்பர்களுடன் சேர்ந்து படகை சரி செய்ய நடுக்கடலில் குதித்துள்ளார். ஆனால், கடலில் நீரோட்டம் வலிமையாக இருந்துள்ளது.
அந்த வழியே வந்த ஒக்கலூசா கவுன்டி ஷெரீப் அலுவலக படகு ஒன்று தேடுதல் பணியில் 4 நண்பர்களை மீட்டு உள்ளது. ஆனால் கடலில் அலைகள் பெரிய அளவில் எழுந்து வந்ததில் யஷ்வந்த் படகிற்கு வர முடியவில்லை.
இதில் அவர் நீரில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, கடலோர காவல் படையினர் பல மணிநேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டதில், காணாமல் போன யஷ்வந்தின் உயிரற்ற உடல் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடà
சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினà®
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சà
உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உகà¯
ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்டà¯
எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வரு
உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலரà¯
பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கதà
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகà
இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்à®
