யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஹெலன் கிராண்டின் (MP Helen Grant) மகனான பென் கிராண்ட் (Ben Grant) மீது குற்றவியல் வழக்கைத் ஆரம்பிபத்துள்ளதாக ரஷ்ய நீதித்துறை தெரிவித்துள்ளது.
கூலிப்படை மீதான குற்றவியல் வழக்கின் கட்டமைப்பிற்குள், பிரிட்டனை சேர்ந்த பென் கிராண்ட் (Ben Grant) , யுக்ரைனுக்காக ஆற்றிய பங்கை ரஷ்ய புலனாய்வாளர்கள் தீர்மானிக்கின்றதாக ரஷ்ய விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
பல நாடுகளைப் போலவே ரஷ்யாவிலும் கூலிப்படையானது ஒரு கிரிமினல் குற்றமாகும். அதன் கீழ், கிராண்டிற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
பிரிட்டனின் கடற்படையான ரோயல் மரைன்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் பென் கிரான்ட் (Ben Grant).

கடந்த மார்ச் முதல், அவர் யுக்ரைனின் பக்கம் போரிட்டதற்காக பிரிட்டன் ஊடகங்களில் ஹீரோவாகப் பென் கிராண்ட் (Ben Grant) போற்றப்படுகிறார். அவரது போர் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டன் பத்திரிகைகள் அடிக்கடி செய்தி வெளியிடுகின்றன.
இந்நிலையில் பென் கிராண்ட் (Ben Grant) அண்மையில் தீயில் காயம்பட்ட ஒரு வீரரின் உயிரைக் காப்பாற்றி அவரை போர்க்களத்தில் இருந்து தூக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் இடம்பெறக்கூடிய உள்ளூராட்சி தேர்தல்
தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ
உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான
உக்ரைன் மீதான ரஷிய தாக்குதல் 3 மாதங்களுக்கு மேல் நடைபெ
தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உ
ஆப்கானிஸ்தானில்
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த உக்ரைய்னில் போர் இடம்பெற்று கொண்டிருக்கையில் தப்பிச சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத அணிதிரட்டல் குறித்த புட்டினின் ஆணை நாட்டின் ஆயுதப்பட
