யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியில் எரிவாயு விநியோக நிலையத்தில் எரிவாயுபெற வந்த பொதுமக்களுக்கும் எரிவாயு விநியோகஸ்தருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு பரமேஸ்வரா சந்தி எரிவாயு விநியோகஸ்தரிடம் எரிவாயு வந்திறங்கியதாக பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனை அடுத்து இன்று அதிகாலை முதல் குறித்த எரிவாயு விநியோக அலுவலகத்திற்கு முன்னால் பொதுமக்கள் எரிவாயு பெறுவதற்கு ஒன்று கூடி இருந்த நிலையில் எரிவாயு விநியோகஸ்தர் எரிவாயு இல்லை என தெரிவித்த போது பொதுமக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

அத்தோடு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் காவல்துறையினரின் தலையீட்டினால் அங்கு கூடியிருந்த பொதுமக்களை காவல்துறையினர் விநியோக நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அங்கு ஏதாவது எரிவாயு கொள்கலன் இருக்கின்றதா என பரிசோதித்த பின் நிலைமை சுகமானது.

மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த
சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
இலங்கையில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ள நிலைய
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து
தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக
நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மற
இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் தமிழ்ப் பட்டயச் ச
