இன்னும் இரண்டு வாரங்களில் அரசாங்க கட்சியை ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கால அவகாசத்துள் ஆளும் மற்றும் எதிர்கட்சி என்ற இரண்டு தரப்பையும் ஒரு வழிப்படுத்தமுடியும் என்றும் ரணில் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரணில் விக்கிரமசிங்க இ்தனை தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு ஆளும் கட்சி ஆதரவு வழங்குவதாக கூறியபோதும், ஆளும் கட்சி இன்னும் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக பசில் ராஜபக்ச நேற்று காட்டிவிட்டதாக மரிக்கார் சுட்டிக்காட்டினார்.
எனவே ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சர்களை பாதுகாப்பதற்கே பிரதமராகியுள்ளார் என்று மரிக்கார் குற்றம் சுமத்தினார்
எனினும் இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தாம் நாட்டுக்கு சேவை செய்யவே வந்துள்ளதாகவும் ராஜபக்சர்களை காப்பாற்ற வரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
விரைவில் நாட்டுக்கான பொருளாதார வேலைத்திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
மாத்தறையிலுள்ள பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இ
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை
கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில
பொலன்னறுவையில் இன்று காலை சாரதியின் கவனயீனத்தால் பேர
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம்
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம
மருத்துவ விடுப்பு எடுக்காமல் உத்தியோகபூர்வ நடவடிக்க
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க