இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் ஊடக அறிக்கைகள் தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்த விடயத்தை உயர் ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுக்க விரும்புவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில்,
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்பவது தொடர்பான இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு உறுதுணையாக இருப்பதாகவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெளிவாக தெரிவித்திருந்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வைத்து அரசியல் அமைப்பின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமென இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்தே இலங்கையில் இந்திய இராணுவம் தரையிறக்கப்படுவதாக பரவலாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சுப்ரமணியம் சுவாமி தொடர்ச்சியாக ராஜபக்சர்களுடன் அதிலும் குறிப்பாக மகிந்த ராஜபக்சவுடன் நட்பு ரீதியான உறவை முன்னெடுத்து வருவதும்ன சுட்டிக்காட்டத்தக்கது.
கடத்தல், பாலியல் வழக்கில் போலீசாரால் தேடப்படும் சாமிய
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முகà
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையிலà¯
நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு à®
சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத à®
தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு '
டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
நாடாளுமன்ற மேலவை எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் செலà
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட
இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியின் 4 ஆண்டு நிறைவை முà
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
