இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ராஜபக்ச அரச பயங்கரவாதம், உச்ச கட்டத்தை அடைந்து, இன்று தன் சொந்த மக்கள் மற்றும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்கள் மீதே அகோரமாக பாய்ந்துள்ளது.
அதன்மூலம் ராஜபக்சர்களின் கோர பயங்கரவாத முகம், சகோதர சிங்கள மக்கள் மத்தியில் இன்று அம்பலமாகியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, உலகின் மிக அமைதியான 31-நாள் கொழும்பு காலிமுக திடல் போராட்டம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து கிளம்பி வந்த அரச பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.
இதனால், இனி இலங்கையர்களின் கோ-ஹோம்-கோட்டா, கோ-ஹோம்-ராஜபக்ச என்ற கோஷங்கள், இலங்கையை நோக்கிய சர்வதேச சமூகத்தின் கோஷமாகவும் மாற வேண்டும்.
கொழும்பில் இருக்கின்ற அனைத்து வெளிநாட்டு ராஜதந்திரிகளும், கொழும்பு காலிமுகதிடல் போராட்டத்தை, சமகாலத்தில் உலகில் நடைபெற்ற மிக அமைதியான, ஒழுக்கமான போராட்டம் என தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் கூறி இருந்தார்கள்.
இந்நிலையில் இப்போராட்டம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், இன்று இலங்கையின் வெட்கமற்ற அரச பயங்கரவாதம் மீண்டுமொருமுறை அம்பலமாகி உள்ளது.ஏன்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அர்த
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
கடந்த 2019ம் ஆண்டு உயிர்தத ஞாயிரன்று மட்டு சியோன் தேவாலய
இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்க
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்க
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
நோயாளி ஒருவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு மு
யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உட்பட 6 பேருக்கு