ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் தமது அணு ஆயுத பலம் மற்றும் இராணுவ பலத்தை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புள்ளதாக உக்ரைன் பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திட்டமிட்டபடி வெற்றி தின கொண்டாட்டங்களை தலைநகர் மாஸ்கோவில் முன்னெடுக்க உள்ள நிலையில், மே 9ம் திகதி கொண்டாட்டங்களுக்காக தற்போது ஒத்திகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யப் படைகள் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை தொடர்புடைய நாளில் அதிகரிக்கக்கூடும் என்று உக்ரைனிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் கண்டிப்பாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொது ஒழுங்கை கண்டிப்பாக பின்பற்றவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்யா வெற்றி தின கொண்டாட்டங்களை முன்னெடுத்துவரும் இந்த நாட்களில், உக்ரைன் மக்கள் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை புறக்கணிக்க கூடாது எனவும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
உங்கள் உயிர் முக்கியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள் எனவும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி விழிப்புடன் இருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளில் மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதிகளில் ரஷ்யா கண்ணிவெடிகளை புதைத்து சென்றிருக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், க
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித
மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர
மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் பெர்னாண்ட் டி வரேன்னஸ
ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செல
உக்ரைனில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (Volodymyr Selensky)தலைமைய
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தாக்குதல் ஒரு மாத மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும், ராணுவ சீருடையில் இருந்த உக்ரைன் தம்பதிகள் சக வீரர்கள் உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன் ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ 1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
