ரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான, நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல மலையாள டைரக்டர் சணல் குமார் சசிதரன் தனது வலைத்தளப் பக்கத்தில், நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவரை கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து சணல் குமார் சசிதரன் கூறும்போது, “நான் மஞ்சு வாரியரை வைத்து படம் எடுத்துள்ளேன். ஆனாலும் அவருடன் தனியாக பேச முடியவில்லை. மஞ்சு வாரியரின் உதவியாளர்களாக இருந்து பின்னர் நிர்வாக தயாரிப்பாளர்களாக மாறிய பினிஸ் சந்திரன், பினு நாயர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளனர். ஒரு நிகழ்ச்சியில் நான் மஞ்சுவாரியரிடம் பேச முற்பட்டபோது, வலுக்கட்டாயமாக இழுத்து சென்று விட்டனர். மஞ்சு வாரியரை வீட்டு காவலில் வைத்துள்ளனர். ஏதேனும் வீடியோவை வைத்து மஞ்சுவாரியரை பிளாக் மெயில் செய்கின்றனரோ என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மலையாள நடிகைகள் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதற்கு மஞ்சு வாரியர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி
பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்
கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறந
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெள
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி
தமி
நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந
நடிகை மேனகா, தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரின் மகளான கீர்
