More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா
ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா
Mar 07
ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும்,பொறுமை காக்கும் எங்களை வீணாக சோதிக்க வேண்டாம் என்றும் பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



பிரித்தானிய நட்பு நாடுகள் விளாடிமிர் புடின் தொடர்பில் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ம் திகதி நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றதுடன், சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.



உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும், உக்ரைனுக்கு பல போர் ஆயுதங்களையும்,நிதியுதவியினையும் வழங்கி வருகின்றது.



இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் டாங்கிகள் மற்றும் விமானங்களை தகர்க்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க வேண்டும் எனவும் பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.



விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பென் வாலஸ், பிரித்தானியாவை சீண்டும் வேலை வேண்டாம் எனவும், எங்களைச் சோதிக்க முற்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



புடின் எங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றே இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம் எனவும், பிரித்தானியாவையும் குறைத்து மதிப்பிடும் சர்வாதிகார தலைவர்களுக்கு என்ன ஆனது என்பது வரலாறு என்றும்,நாங்கள் ஒன்றுபட்டு, அச்சுறுத்தல்களை எதிர்கொண்டால், விளாடிமிர் புடின் வீழ்வது உறுதி என நான் நம்புகின்றேன் என்றும் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.



ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள சேதம் என்பது பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனவும், அப்பாவி உக்ரைன் மக்கள் 1.5 மில்லியன் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர் எனவும் பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.



இதனிடையே, உக்ரைன் விவகாரம் குறித்து பிரித்தானிய மூத்த தளபதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,



இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளில் பிரித்தானிய துருப்புகளுக்கு ஏற்பட்ட இழப்பை விடவும் பலமடங்கு இழப்புகளை ஒரே வாரத்தில் உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்டுள்ளது.



ஆனால், இதனால் விளாடிமிர் புடின் பின்வாங்கிவிடுவார் என கருத முடியாது எனவும், இன்னும் மிக மோசமான தாக்குதலை அவர் உக்ரைனில் நிகழ்த்தக் கூடும் எனவும் பிரித்தானிய தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar23

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாகà

Jan01

தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரொன் வைரஸ் திரà

Mar07

உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாà®

Mar06

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்à

Apr01

 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணà®

Jan27

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக à®

May25

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாடà

Mar16

சிங்கப்பூரின் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் வாளால் தà

Aug09

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®

Mar12

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவà

Mar07

உக்ரைன் தலைநகர் கீவ்வை பிடிக்க ரஷ்ய திட்டமிட்டுள்ளது.

Jun23
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (18:54 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (18:54 pm )
Testing centres