இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கு இந்தியா கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது என அறியமுடிகின்றது என ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நெருக்கடியிலிருந்து நீண்டகால மீட்சியை இலக்காகக்கொண்ட பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை சமர்ப்பிக்க இந்தியா கோரியுள்ளது.
மேலும், வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதாரத் திட்டங்களைத் தொடங்குவதற்கான முன்னேற்பாட்டு பட்டியலையும் இந்தியா கோரியுள்ளது என அறியமுடிகின்றது.
கடந்த வருடம் டிசம்பரில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக்கொண்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் இந்திய விஜயம் இரண்டு முறை இரத்துச் செய்யப்பட்டது.
இதன் காரணமாக உணவு, எரிபொருள், மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு இன்னும் திட்டம் வகுக்கப்படவில்லை.
இலங்கை எடுத்த டிசம்பர் மாதக் கடனும் இந்த வாரத்தில் செலுத்தப்பட இருந்த நிலையில், பலாலி விமான நிலையத்தை மீண்டும் திறப்பது, திருகோணமலைத் துறைமுகப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா முன்வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய
பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந
இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்
தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக
அரசாங்கங்கள், கடந்த எட்டு வருடங்களில் பத்து விசேட ஜனா
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைப
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
உலக சுகாதார நிறுவன ஆய்வின் படி எமது நாடு கொவிட்-19 தொற்ற
நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் யாழ்ப்பாணக்
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம