பிரபல இசையமைப்பாளர் டி. இமான் விரைவில் மறுமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள டி.இமான் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த டிசம்பர் மாதம் விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே இமான் தனது ட்விட்டர் பதிவில், வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம்.
இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை. எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இமான் மறுமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மே மாதம் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி
தமிழ் சினிமாவின் முன்னணி
பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் வெ
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ம
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது
தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந