இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் பழைய குயவர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜன்(46). இவரும் இவரது மனைவியும் ஒன்று சேர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தை குறித்த அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ள இவர் ஆலோசகராகவும் திகழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தம்பதி பங்கு சந்தையில் நல்ல லாபம் ஈட்டி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் வெடிக்கும் போர் காரணத்தினால் பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நாகராஜன் தனது மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவியின் சகோதரி பல முறை கால் செய்தும் எடுக்காததால் சந்தேகத்தின் பெயரில் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவை திறக்க முடியாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த பொழுது இருவரும் பிணமாக தொங்கியதையடுத்து அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழி
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று ந
கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க
கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன
மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்
விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ
தூத்துக்குடி அருகே உள்ள தாள முத்து நகர் முத்தரையர் கட
விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இதுவரை
நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள