More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு!
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு!
Feb 26
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்பு!

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.



உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்திவருகின்றன. மூன்றாவது நாளாக இன்றும் போர் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் இந்த முடிவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்துள்ளன. ரஷ்யாவின் அறிவிப்பை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்தும்படி அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.உக்ரைனில்  பதற்றத்தை தணிக்க வேண்டுமென்றும் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கொண்டுவரும் தீர்மானம் மீது ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.



இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை நிறுத்தக்கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்  இந்தியா, சீனா, ஐக்கிய அமீரகம் கலந்துகொள்ளவில்லை. இதன்மூலம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளன .இதையடுத்து தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை ரஷ்யா தோல்வியடைய செய்தது. 



இதனிடையே இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரி ரோமன் தற்போதைய சூழல்  ஏற்படுவதற்கான காரணத்தை இந்தியா ஆழமாக புரிந்து கொண்டுள்ளது. எனவே பாதுகாப்பு கவுன்சில் வரைவுத் தீர்மானம் வாக்கெடுப்பில் ரஷ்யாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.   அதேபோல்  இந்தியாவின் ஆதரவை உக்ரைனும் எதிர்ப்பார்த்த சூழலில் இந்தியா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் வாக்கெடுப்பில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr16

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் காஷ்மீர், பஞ்சாà

Mar07

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான காà®

Feb04

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 60ஆயிரத்தி

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நிà

Mar13

ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நகரத்தில், ரஸ்யா நிர்வà

Jun09

ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்னà

May15

கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகà

Apr17

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமà

Jun17

அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மாà

Apr14

ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு மà

Jul25

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் à®

Dec29

 ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோட

Sep21

ஜப்பானில் உள்ள 125 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 29 சதà®

Jan25

விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எà®

Mar08

உள்ளூர் விலங்கியல் பூங்காவில் ஒரு சிறுத்தà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:00 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (15:00 pm )
Testing centres