ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராணுவ முகாம் மீது திடீரென நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ரஷ்யாவில் பாரிய பரபரப்பு நிலவியுள்ளது.
ரஷ்யா - பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் இருக்கும் Oktyabrsky என்ற கிராம பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஏவுகணை தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் (Vyacheslav Gladkov) உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் சரியாக அந்த பகுதியில் என்ன நடந்தது என்பதை அவர் இதுவரை குறிப்பிடவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நான்கு ரஷ்ய துருப்புகள் வரை காயமடைந்து இருப்பதாகவும், உள்ளுர் அதிகாரிகளின் தகவலின் படி பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த ராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் மனித காரணிகளால் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் தெரிவித்துள்ள பெல்கோரோட் நகர மக்கள் Oktyabrsky கிராமத்திற்கு அருகில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். பெல்கோரோட் நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில், துப்பாக்கி முனையில் தன
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உளà
மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐகà¯
இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு à®
ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான ந
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த
கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடுமà
தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்
ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுக
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க விமானப் படையின் சி-17
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப
