இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரையிலான விமானங்கள் தொடர்பாக உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு பல தசாப்தங்களாக விதிக்கப்பட்டிருந்த தடை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தெமியா அபேவிக்ரமவால் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் அனுமதியுடன் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் தெமியா அபேவிக்ரம கூறுகையில்,
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கட்டுப்பாடு நடைமுறையில் இருந்த போதிலும், இது உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறைக்கு தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கட்டுப்பாடு காரணமாக சில விமான இயக்குனர்கள் தங்கள் பணியாளர்களுக்கும், பயணிகளுக்கும் திட்டமிடப்படாத தங்கும் இடங்களை வழங்க வேண்டியிருந்தது. இதனால் இயக்குனர்களுக்கு கூடுதல் செலவாகும்.
இதேவேளை தடை நீக்கப்பட்டாலும், விமானிகள் மற்றும் விமான இயக்குனர்கள் மாலைநேரம் மற்றும் அதிகாலைக்கு இடையில் செயற்படும் போது இரவு நேர பறத்தலுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாண், பனிஸ் போன்ற பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சக்தி மற்
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக
உலக அரசியல் போட்டிகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் தி
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர்
நாட்டில் மனித படுகொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் த
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து
