உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது. டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீதே இவ்வாறு செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது.
டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவண காட்சிகள் திரையிடப்பட்டது.
மேலும், அந்த திரையில் செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலும் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலா
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்த
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவத
ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்கள
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 10 ஆண்டுகளுக்கும
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார
