இலங்கையின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேற்குலக நாடு ஒன்றின் கொன்சோல் ஜெனரலாக கடமையாற்றி வரும் பலம்பொருந்திய இராஜதந்திரி ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சியில் தொடர்பாடல் விவகாரங்களுக்கு இந்த இராஜதந்திரி பொறுப்பாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜதந்திர அலுவலகத்தில் கடமையாற்றிய பெண் பணியாளர்கள் இந்த பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
குறித்த இராஜதந்திரி ஓர் மிருகம் என பெண் பணியாளர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். பணியாளர்களை மிக இழிவாக திட்டுவதாகவும் தரக்குறைவாக நடாத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மேற்குலக நாட்டின் ஊடாகவும் இராஜதந்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித பதிலும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாம
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கி சூட்டு
கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி
கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளு
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந
மூன்று தசாப்த கால கடின உழைப்பு மற்றும் இராணுவத்திற்கா
பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட
நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி