உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரையில் 15 ஆயிரம் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் இராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் உள்ளது.
இதுவரையில் ரஷ்யா படையினர் 7000 முதல் 15 ஆயிரம் வரையிலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
இதேவேளை, அப்பட்டமான பொய்களுடன் ரஷ்யாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம் சுமத்தியுள்ளார்.
அணு ஆயுதம் மற்றும் இரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கà
பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கதà
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்à
வங்கக்கடல் பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளà
ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற
ரஷ்யா நடத்திவரும் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு ந
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சரà
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வà®
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து à®
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56), தன்னை விட 24 வயà®
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகிதà
