உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் யோசனை கூறியுள்ளார்.
கடந்த மாதம் 24ஆம் திகதி தொடங்கிய உக்ரைன் - ரஷ்யா போர் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அதே போல உக்ரைனும் சளைக்காமல் சண்டையிட்டு வருகிறது. இதனிடையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து அமைதியை நிலைநாட்ட முடியும் என்றார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான இந்த போர் நீண்ட காலம் நீடித்தால் அனைத்து நாடுகளுமே அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இம்ரான் கான் கூறினார்.
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப
அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக
இந்தோனேசியாவில் ஆண்டு தோறும் கனமழையின் காரணமாக பயங்க
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று சக்திவாய்ந
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
பிரம்மபுத்ரா நதியில் அணை கட்டும் திட்டத்துக்கு இந்தி
ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய
மஸ்தார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் க
கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத
எலெக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்துச் சிதறியதால் ஏற்பட
