ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது.
இந்நிலையில், ரஷ்யா நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் வுலின் கூறுகையில், ரஷ்ய குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சொத்துக்கள் திருடப்படும் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு பகுதியாக செர்பியா ஒருபோதும் இருக்காது.
ரஷ்யா நாட்டின் மீது எங்களால் பொருளாதார தடைவிதிக்க முடியாது. ரஷ்ய ஊடகங்களை நாங்கள் தடைசெய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையில் உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணிக்கும் நிலையில், செர்பியா ரஷ்யவின் பிரபல கேஸ் நிறுவனமான காஸ்ப்ரோம் உடன் ஒரு புதிய எரிவாயு ஒப்பந்தத்தை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக்
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய
மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங்
ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில்
தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தின
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நா
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க
மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
