ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.இது தொடர்பாக மும்பையில் கேகேஆர் அணி தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ் விலகிய நிலையில், ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்தியாளர்களிடம் பேசினார். கொல்கத்தா அணி எப்போதும் பயம் இன்றி அதிரடியாக விளையாட கூடியவர்கள்.
கொல்கத்தா அணியை வெளியில் இருந்து பார்க்கும் போது நான் இதை தான் கவனித்தேன். முதல் பந்தில் இருந்து எதிரணிக்கு பஞ்ச் தருவார்கள்.
எதிரணியை ஸ்தம்பிக்க வைப்பதில் வல்லவர்கள். இதே போன்ற மனநிலை கொண்ட அணியை தான் நான் விரும்புகிறேன். அதே மனநிலையுடன் கொல்கத்தா அணி பேட்ஸ்மேன்கள் இம்முறையும் இருக்க வேண்டும்.ஆரோன் பிஞ்ச், பாட் கம்மின்ஸ், ரஸில், ரஹானே போன்ற சீனியர் வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை பெருமையாக நினைக்கிறேன். அவர்கள் நாட்டுக்கு அவர்கள் பல சாதனைகளை செய்துள்ளனர். ஒரு கேப்டனாக அவர்களிடம் பல அறிவுரைகளை கேட்பேன்.
இளம் வீரர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று அவர்களிடம் கற்று கொள்வேன்.இன்னும் பேட்டிங் வரிசை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நான் மூன்றாவது வீரராக களமிறங்கலாம் என்று நினைக்கிறேன். நான் சூழலுக்கு எற்ப விளையாடுவேன். நான் நங்கூரம் போல் நின்று ஆடுவேன். அதற்காக என்னை அதே பணியை செய்ய சொல்வது சரியதாக இருக்காது. எனக்கு அதிரடி ஆடவும் தெரியும். சூழலுக்கு ஏற்ப நம் ஆட்டத்தை கட்டமைக்க வேண்டும்.