நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண்முகம் சுப்பையாவை ஆதம்பாக்கம் சிறையில் அடைக்கப்பட்டதற்கு பின் நடந்தது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் சண்முகம் சுப்பையா. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏவிபிவியின் தேசிய தலைவராக இவர் முன்பு பதவி வகித்தார்.ஆதம்பாக்கத்தில் தனது அப்பார்ட்மெண்டில் பார்க்கிங் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு மூதாட்டி வீட்டு வாசலில் இவர் சிறுநீர் கழித்தார்.
அதோடு அவர்கள் வீட்டு வாசலில் பயன்படுத்தப்பட்ட மாஸ்க்கை தூக்கி எறிந்து தொந்தரவு கொடுத்தார். மேலும் அவர் வீட்டு வாசலில் இறைச்சிகளை வீசி எறிந்ததாகும் புகார் வைக்கப்பட்டு உள்ளது. 2020ல் இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் அப்போது வெளியாகின. இது தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மூதாட்டி சார்பில் பாலாஜி விஜயராகவன் என்பவர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆனாலும் இரண்டு வருடமாக இவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு ஏபிவிபிஅமைப்பினர் முதல்வர் வீடு முன் போராட்டம் நடத்தி கைதும் செய்யப்பட்டனர்.
அதோடு சுப்பையா சிறுநீர் கழித்தது உண்மை என்பதையும் மூதாட்டி தனது வாக்குமூலத்தில் கூறி இருக்கிறார். இதையடுத்தே மார்ச் 31ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதையடுத்து செங்கல்பட்டு சிறையில் சுப்பையா அடைக்கப்பட்டார். அந்த மூதாட்டி திடீரென நேற்று கோர்ட்டுக்கு வந்தது எப்படி? யார் அழுத்தம் கொடுத்தது என்று விசாரித்து வருகின்றனர். இது போக வழக்கில் புகார் அளித்த பாலாஜி விஜயராகவன் தன்னை சிலர் மிரட்டுவதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார்.