தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்து லட்சம் செலவு செய்து தம்பியின் மெழுகு சிலையில், மகளை வைத்து காது குத்து்ம் விழாவினை நடத்தியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பவர் சவுந்தரபாண்டி மற்றும் பசுங்கிளி தம்பதிகள். இவர்களுடைய மகன் பாண்டித்துரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள், மகனுக்கு காதணிவிழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இறப்பதற்கு முன்பு தனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் என்ற ஆசை தாய்மாமன் பாண்டித்துரைக்கு இருந்துள்ளது.
தனது குழந்தைகளுக்கு தாய்மாமனான பாண்டித்துரை இறந்து போனதால் அவரைப் போன்றே மெழுகு சிலையினை உருவாக்கி, மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவத்தினால் தனது தம்பியின் நீண்ட நாள் விரு்பத்தினை நிறைவேறியதாக கூறும் அவரது அக்கா, இதற்காக ஐந்து லட்சம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின்
நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வர
ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதமானது, தரையில் இருந