ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வலர்கள் 'நாங்கள் கோட்டாபயவுடன் இருக்கிறோம்' WeAreWithGota என்ற தொனிப்பொருளில் பாரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை, எரிபொருள் விலையேற்றம், உணவுப் பொருள் விலையேற்றம், பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு என நாட்டில் நாளுக்கு நாள் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.
இது போக நாடு முழுவதும் தொடர் மின் வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதனால் மக்கள் அரசாங்கம் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில், அண்மை காலமாக சமூக ஊடகங்களில் GotaGoHome என்ற பிரச்சாரம் ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது குறித்த பிரச்சாரத்திற்கு எதிராக WeAreWithGota என்ற தொனிப்பொருளில் பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசு சார்பு சமூக ஊடக ஆர்வலர்கள் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். பெருமளவிலான அரச அதிகாரிகள் இந்தப் பதிவை பரிமாறிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்கு எதிராகவும் உயரும் விலையேற்றத்தை கண்டித்தும் மாபெரும் போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
நாளுக்கு நாள் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகரித்துக்கொண்டிருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட
பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக
ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை குறித்து பிரதமர் மகிந
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிண
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட