ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறித்து அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன.
இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவிஷன் அலுவலக கட்டிடமும் பலத்த சேதமானது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
பக்கத்து நாடான ஈரானில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன்
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
