ரஷ்யாவுடனான போரில் இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவில் விமான தாக்குதல் நீடிக்கிறது.
இந்த நிலையில், பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதனால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் தரப்பில் 1300 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ‘உக்ரைன் தலைநகர் மீது தொடர்ச்சியாக வெடிகுண்டுகளை வீசவும், நகரத்தை கைப்பற்ற குடியிருப்புவாசிகளை கொல்லவும் ரஷ்யா முயற்சி மேற்கொள்ளும். அதுவே அவர்களின் இலக்கு என்றால், அவர்கள் வரட்டும்.
அவர்கள் குண்டுவீச்சை நடத்தி முழு பிராந்தியத்தின் வரலாற்று நினைவகத்தையும், கீவின் கலாச்சார வரலாற்றையும், ஐரோப்பாவின் வரலாற்றையும் அழித்தால், அவர்கள் கீவில் நுழைய முடியும்’ என்றார்.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான
உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட கனடா நாட்டில் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரத அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறைய அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலி
