உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்காட்சியில் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்ட ரஷ்ய ஊடகங்களில் இது ஒரு அசாதாரணமான நிகழ்வு என்று பிபிசி கூறுகிறது.
ரஷ்யா1 அலைவரிசையில்; பிரபலமான கிரெம்ளின் சார்பு பேச்சு நிகழ்ச்சியிலேயே இந்த ரஸ்ய எதிர்ப்பு விமர்சனம் வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வியாளர் செமியோன் பக்டசரோவ், "நாம் மற்றொரு ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல வேண்டுமா, உக்ரைன் அதைவிட மோசமானது" என்று கூறியதாக மொஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“உக்ரைனில் அதிகமான மக்கள் ஆயுதங்களைக் கையாளுவதில் மிகவும் மேம்பட்டவர்கள்," என்று அவர் கூறினார்.
பக்டசரோவுடன் இணைந்து தோன்றிய திரைப்படத் தயாரிப்பாளரான கரேன் ஷக்னசரோவும் கிரெம்ளினின் முடிவு குறித்து கேள்வி எழுப்பினார்.
"கியேவ் போன்ற நகரங்களை கைப்பற்றுவது என்பதை கற்பனை செய்வது தனக்கு கடினமாக உள்ளது.
தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை," என்று ஷக்னசரோவ் கூறினார்.
இதேவேளை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர், ஜனாதிபதி புடினின் நண்பரான சோலோவியேவ், ரஸ்ய படை நடவடிக்கையை “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று அழைத்ததாக பிபிசி கூறியுள்ளது
ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பி
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு வாரமும் உலக அளவில் கொரோனா இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மே இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பி இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல த கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்- தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நி பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொர 138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்று
