சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, பெரியூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில் தனலட்சுமி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் தனலட்சுமி, பள்ளி சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கச் சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் பள்ளி சுவரில் பெயிண்ட் அடித்துள்ளனர்.
இதை வீடியோ எடுத்தவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், உடனடியாக தலைமை ஆசிரியர் மீது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப
ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர
மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத
இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ
சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன
ரஷ்யா-உக்ரைன் போரின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைக
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத
மாநில மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவுகள் அரசை கட்டுப
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்
‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில
