சாதாரண செல்போன்களிலும் கூட இனிமேல் பண பரிவர்த்தனை செய்வதற்கான. 'யுபிஐ-123 பே' சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தினார். ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் அனைத்து இடங்களிலும் சாதாரண தொலைபேசி வைத்துள்ளவர்கள் பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தச் சேவையைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.இந்தியாவில் ஆண்ட்ராய்டு செல்போன்களில் வங்கிப் பணி பரிமாற்றம் எளிதாக நடக்கிறது. ஆனால், இந்த வகை செல்போன்களை வாங்க முடியாத சாதாரண மக்களால்,
இந்த டிஜிட்டல் நவீன மயத்தில் பங்கேற்க முடியவில்லை.இதனால், சாதாரண செல்போன்களை வைத்துள்ள சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையிலான யுபிஐ டிஜிட்டல் நிதி சேவை விரைவில் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்த சேவை மூலம் சாதாரண செல்போன்கள் வைத்துள்ளவர்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் பங்கேற்க முடியும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
சாதாரண செல்போன் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தங்களது வங்கி கணக்குடன் முன்கூட்டியே இந்த யுபிஐ-123 பே சேவையைப் பயன்படுத்த இணைத்திருந்தால் மட்டும் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம புறங்களில் உள்ளவர்களுக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கான 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்ணையும் தொடங்கி வைத்தார். இதற்கு டிஜிசாதி எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் பிரதமர் மோடி ரூ.1,500
ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு
விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு
இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத
இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன
தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய
தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில
உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் த
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க.வுக்கு
தி.மு.க. தலைவ