இஞ்சியை பயன்படுத்தும் முன்பு கட்டாயம் இதை கவனிங்க: உஷார்
Feb06
இஞ்சியை பயன்படுத்தும் முன்பு கட்டாயம் இதை கவனிங்க: உஷார்
இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான பிரச்சினை முதல் புற்றுநோய் வரை தடுக்கக் கூடிய ஆற்றல் உடையது
சில கவனிக்க வேண்டிய குறிப்புகள்:
இஞ்சியை நன்கு இடித்து சாறெடுத்து 15 நிமிடங்கள் ஒரு டம்ளரில் வைத்திருக்கவும்.
அதன் கசடுகளை விட்டுவிட்டு தெளிவான சாறை மட்டும் எடுத்து குளிர்சாதன பெட்டியில் 5-6 நாட்கள்வரை வைத்திருக்கவும்.
2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இஞ்சி கொடுக்கப்படக்கூடாது.
பொதுவாக, இளைஞர்கள் 4 கிராம்களுக்கு மேல் ஒரு நாளில் இஞ்சியை எடுத்துக்கொள்ளுதல் கூடாது. (சமையலில் சேர்க்கப்படுவதையும் சேர்த்து)
கர்ப்பிணி பெண்கள் தினமும் 1 கிராமிற்கு மேல் இஞ்சி எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
உலர்ந்த அல்லது பச்சையான இஞ்சியை கொண்டு இஞ்சி டீ செய்து ஒருநாளைக்கு 2 வேளைகள் குடித்து வரலாம்.
கடுமையான எரிச்சலைக் குறைப்பதற்காக பாதிக்கப்பட்ட இடத்தில் இஞ்சி எண்ணெயை ஒருநாளுக்கு சில முறைகள் மசாஜ் செய்யலாம்.
மற்ற வடிவத்தில் எடுத்துக்கொள்வதைவிட இஞ்சி மாத்திரைகள் நல்ல பலன் தரக்கூடியதாக உள்ளன.
மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னர் இஞ்சி மாத்திரைகளை உட்கொள்வது பக்க விளைவுகளை தவிர்க்க உதவும்.