More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோரிக்கை விடுத்தால் இலங்கைக்கு உதவ தயார்! - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு....
கோரிக்கை விடுத்தால் இலங்கைக்கு உதவ தயார்! - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு....
Feb 04
கோரிக்கை விடுத்தால் இலங்கைக்கு உதவ தயார்! - சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு....

இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.



சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தில் பணித் தலைவர் மற்றும் துணைப் பிரிவுத் தலைவர் Masahiro Nozaki கருத்து வெளியிடுகையில், "இலங்கையில் பொருளாதார மற்றும் கொள்கை முன்னேற்றங்களை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது" என்று கூறினார்.



பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் கொள்கைகளை மீளாய்வு செய்வதற்காக வருடாந்த இருதரப்பு கலந்துரையாடலின் ஒரு பகுதியாக நிதிக் குழுவொன்று கடந்த வருடம் டிசம்பரில் கொழும்புக்கு விஜயம் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



இந்நிலையில், நாட்டின் சமீபத்திய பொருளாதார தரவுகளை மதிப்பாய்வு செய்வதற்காக பிப்ரவரி இறுதியில் ஒரு குழு கூட்டம் நடைபெறும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.



இதேவேளை, பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணத்துவ ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச முன்னதாக தெரிவித்திருந்தார்.



அதேநேரம், நிதி அமைச்சின் பேரண்ட நிதிப்பிரிவுக்கு ஆலோசனை பெறும் செயற்பாடாகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப் பெறப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பிய கடிதத்தில் பயிற்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு நிதியத்தின் பிரதிநிதிகளை வரவழைப்பது தொடர்பான விடயமே அடங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தி

Oct18

நாட்டின் அவசர மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து கொள்வத

Feb10

 கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினாà

Aug12

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டà®

May27

அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு  மட்டுமà

Jan26

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதல் டிசம்பர் 31

May03

பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு

Jul16

தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் தà

Mar08

ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15 à®

Sep23

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆ

Oct05

ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இà

Mar14

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரà

Mar23

சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3

Jan01

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்à®

Apr30

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறுà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (08:48 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (08:48 am )
Testing centres