அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையாற்றும் சுமார் 500 தாதியருக்கு கோவிட் தொற்றியுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களில் கர்ப்பிணி தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் இருக்கும் 50க்கும் மேற்பட்ட தாதியர்கள் இருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதவத்த தெரிவித்துள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 200 தாதியருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இவர்களில் 21 பேர் கர்ப்பிணி தாய்மார் எனவும் சொய்சா பெண்கள் மருத்துவனையில் 5 கர்ப்பணி தாய்மார் இருப்பதாகவும் கண்டி வைத்தியசாலையில் நான்கு கர்ப்பிணி தாய்மார் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் பரவி வரும் கோவிட் காரணமாக கர்ப்பிணிகளான தாதிமார் மற்றும் பாலுட்டும் தாய்மாரின் நிலைமை பாரதூரமாக மாறக் கூடும் என்பதால், அவர்களுக்கு விசேட விடுமுறை அனுமதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்கு உள்ளான தாதிமார் ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்படுவதால், தொற்று பரவுவது மேலும் இலகுவாகியுள்ளது.
கோவிட் தடுப்பு வேலைத்திடடம் தற்போது தோல்வியடைந்துள்ளதால், அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அத்தியா
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையி
தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர்
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண