பாம்பு கடித்த பின்பு வாவா சுரேஷ் என்ன செய்தார்? மருத்துவமனையில் அவரின் நிலை!
Feb04
பாம்பு கடித்த பின்பு வாவா சுரேஷ் என்ன செய்தார்? மருத்துவமனையில் அவரின் நிலை!
பிரபல பாம்பு பிடி மன்னனான வாவா சுரேஷ் நேற்றைய தினத்தில் ராஜநாகம் தீண்டியதால் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் பல ஆயிரக்கணக்கான பாம்புகளை பிடித்துள்ளார்.
இந்நிலையில், கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷுக்கு தகவல் வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாவா சுரேஷ், குறித்த ராஜ நாகத்தினை பிடித்துவிட்டு, அதனை பையில் போடுவதற்கு முயற்சித்த போது அவரது வலதுதொடையில்பாம்புகடித்துள்ளது .