ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை நடந்த அன்றைய தினமே சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 17 மாத காலம் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு
எனது கணவரான ரிஷாட் பதியுதீன் 20 வருடகாலமாக நாடாளுமன்ற உ
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்க
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு
சாத்தியமான சமமான விநியோகத்தை
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி
கோவிட் காரணமாக எதிர்ப்பார்க்காத அளவில் பாரிய விகிதாச
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் ச