மன்னார் வளை குடா கடல் பிராந்தியம் அருகே இரண்டாம் மணல் திட்டில் கரை ஒதுங்கிய இலங்கையின் மர்மப் படகு குறித்து உளவுத்துறை கடலோர காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தனுஷ்கோடி அருகே இரண்டாம் மணல் திட்டில் இலங்கை பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கடந்த 29/01/2022 இரவு தனுஷ்கோடி பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் மெரைன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற மெரைன் பொலிஸார், உளவுத்துறை மற்றும் சுங்கத் துறையினர் படகை மீட்டு இரவு கரைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
இதன்போது மீட்கப்பட்ட பைபர் படகு இலங்கை புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட வெள்ளை மற்றும் சிவப்பு கலரில் இருந்துள்ளது.
படகில் யாரேனும் ஊடுருவினார்களா? அல்லது கடத்தலுக்கு பயன்படுத்த வந்ததா ? அல்லது காற்றின் சீற்றத்தில் கரை ஒதுங்கியுள்ளதா என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகில் இன்ஜின் பொருத்தப்படும் இடம் சேதமடைந்தும், படகில் மீன்பிடி உபகரணங்கள் இல்லாமல் இருந்ததாக தெரிவித்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்கப்பட்ட பைபர் படகை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
ஹொரணையில் சிற்றூர்ந்து ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 45 கà®
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராà®
யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையாà
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண சà®
கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியரà
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்பà®
இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (28-05-2022) என்னவென்று தெரிந்
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாà
