10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்கின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார்.
தனது அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேசன் நடத்துவது போல, நடிகர் கார்த்தியும் உழவன் பவுண்டேசன் வைத்து இயற்கை விவசாயத்துக்கும், விவசாயிகள் மேம்பாட்டிற்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் கால்வாய்கள் வெட்டுதல், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மேம்பாட்டிலும் உழவன் பவுண்டேசன் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியிலும் உழவன் பவுண்டேஷன் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் அறிவுரைப்படி அவரது ரசிகர்கள் சென்னைப் பெருநகரங்களில் உணவு வண்டியை தொடங்கி உள்ளனர்.
உணவுக்கான விலையாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து நடிகர் சுகுமார் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில், "சென்னையில் எங்கெங்கும் இப்போது பார்க்க முடிகிறது... 10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு.!!! நல்ல நண்பனாக! நல்ல தந்தையாக!, நல்ல மனித நேயனாக கார்த்தி மிளிருகிறார்.!! தனது ரசிகர்களை கரம் கொடுத்து சி(க)ரம் உயர வைக்கிறார். என பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுக
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜி
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுர
சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்
கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர
சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந
