கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞரொருவர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக கலேவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ம் திகதி ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து பார்வையிட சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அங்கு யுவதியின் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனது தலை முடியை வெட்டி தனக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் ஹொரவ்பொத்தானை- நிக்கவெவ சேர்ந்த கபூர் முகம்மட் சாகீர் (19வயது) எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த தாக்குதல் நடத்தியவர் குறித்த பெண்ணின் தந்தை எனவும் அவருடன் பக்கத்து வீட்டார் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தாக்குதல் நடாத்திய குறித்த யுவதியின் தந்தையை தொடர்புகொண்டு கேட்டபோது இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வந்து கதவை தட்டியதாகவும் இதனாலேயே தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவà®
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கபà
நுவரெலியாவில் இளம் யுவதியின் விபரீத முடிவு காரணமாக பெ
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக à
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
அரசாங்கத்தில் தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுக் கொà®
இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52
ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒà®
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பிà®
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கட்டுவதில் சந்தேகம் இருà
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்à
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக
