More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் அட்டகாசமாய் வாழும் நபர்! !
 ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் அட்டகாசமாய் வாழும் நபர்! !
Feb 02
ஒரே வீட்டில் எட்டு மனைவிகளுடன் அட்டகாசமாய் வாழும் நபர்! !

சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாகவே உள்ள நிலையில், , ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் ஒருவர் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆகவேண்டும்.



ஏனெனில் தாய்லாந்தில் அப்படி வாழும் ஒருவர் குறித்த சுவாரஸ்ய தகவல்தான் இது. தாய்லாந்தில் உள்ள , ஓங் டாம் சோரோட் என்ற அந்த நபர், ஒரு டாட்டூ கலைஞர் . அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி தனது கதையை பகிர்ந்துகொண்ட பிறகு பிரபலமானார்.



இந்த நிகழ்ச்சியின் வீடியோ யூடியூப்பில் மட்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.



நேர்காணலின் போது , தனது மனைவிகள் ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பழகுவதாகவும், அவர்கள் அனைவரும் "இணக்கமான குடும்ப உறவை" பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறினார். அவர் தனது இளம் மனைவிகளை சந்தித்த விதமும் மிகவும் சுவாரஸ்யமானது.சோரோட் தனது முதல் மனைவியான நோங் ஸ்ப்ரைட்டை ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்ததாக கூறியுள்ளார். தனக்கு அவரை மிகவும் பிடித்திருந்ததாகவும், தன்னை மணம் முடிக்க தயாரா என அவரைக் கேட்டதாகவும், அதற்கு நோங் ஸ்ப்ரைட்டும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதேபோல், தனது இரண்டாவது மனைவி நோங் எல்லை அவர் சந்தித்தபோது, முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்தது.



ஆச்சரியம் என்னவென்றால், சோரோட்டின் முதல் மனைவியைப் பற்றி அறிந்திருந்தும் நோங் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். மூன்றாவது மனைவியை ஒரு மருத்துவமனையிலும், தனது நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மனைவிகளை முறையே Instagram, Facebook மற்றும் TikTok ஆகிய சமூக ஊடக தளங்களிலும் சந்தித்ததாக அவர் நேர்காணலில் கூறியுள்ளார்.இந்நிலையில் தனது தாயுடன் ஒரு கோயிலுக்கு சென்றபோது, நோங் பிலிம் என்ற மற்றொரு பெண்ணைச் சந்தித்தார். பார்த்தவுடனேயே அவருடன் காதலில் விழுந்தார் ஓங் டாம் சோரோட்டின் ஏழாவது மனைவியானார் அந்த பெண். அதன் பிறகு, பட்டாயாவில் ஒரு விடுமுறையின் போது இவர் தனது எட்டாவது மனைவியான நோங் மாயை சந்தித்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், பயணத்தின் போது அவரது நான்கு மனைவிகள் அவருடன்தான் இருந்தனர்.இந்நிலையில் அவரது வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் அவரது வசீகரமான தோற்றமும் மிகுந்த அக்கறை காட்டும் இயல்பும்தான் என அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.



அதேசமயல் நிகழ்ச்சியில் பேசிய அவரது மனைவிகள் அனைவரும் அவர் "மிகவும் அக்கறையுள்ள மனிதர்" என்பதை ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். சோரோட்டுக்கு ஏற்கனவே தனது முதல் மனைவியுடன் ஒரு மகன் உள்ளார். அவரது இரண்டு மனைவிகள் தற்பொது பிரசவித்துள்ளார்களாம்.



பணத்துக்காக பெண்கள் தன்னை திருமணம் செய்து கொண்டதாக பரவிய வதந்திகளை நிராகரித்த அவர், "எனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவரவருக்கு ஒரு கடமை உள்ளது.



மேலும் எனது மனைவிகள் உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் அன பல வித பொருட்களை வியாபாரம் செய்கிறார்கள். இதன் மூலம் எனக்கு பொருளாதார ரீதியாக உதவியாக இருக்கிறார்கள்" என்றார்.



ஏழு ஜென்மத்துக்கும் ஒரே மனைவி என்ற எண்ணத்தில் சிலர் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்க, ஒரே ஜென்மத்திலேயே எட்டு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த தாய்லாந்து ரோமியோவை பார்த்து இணையதளவாசிகள் பலரும் கடுப்பில் உள்ளார்களாம் .






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep15

இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந

Jul25

ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்

Sep28

கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து

Jun08

இலங்கையர் மரணம்

ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்க

Feb03

2 ஆம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானிய இராணுவத்தில் ப

Mar08

ரஷ்ய இராணுவப் படைகள் உக்ரைனில் உள்ள பல்வேறு நகரங்களில

Oct01

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட முதல்

Mar16

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile

Feb21

பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான

Mar21

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இரா

Jun03

உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட

Sep23

தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ

Aug17

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

Apr10

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட

May20

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (21:21 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (21:21 pm )
Testing centres