சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் இன்று மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளரே இவ்வாறு முகம் மற்றும் கைகளில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் கச்சாய் வீதி ஊடாக சென்ற ஊடகவியலாளரை மோதிக்காயப்படுத்தும் வகையில் வான் ஒன்று ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வானில் இருந்தவர்களில் ஒருவர் பொல்லுகள் மற்றும் கல் ஆகியவற்றால் ஊடகவியலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வானில் ஏறித் தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள
மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள்
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகர
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கான தீர்வாக அரச
யாழ். மாவட்டத்தில் நாளை (08) முதல் தேநீர், பால் தேநீர், ப
யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவர
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்